கிளிநொச்சியில் இம்மாத இறுதியில் காணமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை.

Friday, April 8th, 2016

காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இம் மாத இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 25 தொடக்கம் 28 வரை மூன்று நாட்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இவ் விசாரணைகள் இடம்பெறவுள்ளது என ஆணைக்குழவின் செயலாளர் எச் டபிள்யூ குணதாச அறிவித்துள்ளார்.

அத்தோடு அதற்க முன்னோடியாக  வரும் 11 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் முன் ஏற்பாடு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

Related posts: