வடமராட்சி, தென்மாராட்சி வலயங்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வீழ்ச்சி!

Tuesday, October 11th, 2016

வடமராட்சி, தென்மராட்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கல்வி வலயத்தில் இம்முறை 77 பாடசாலைகளைச் சேர்ந்த 213 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். வலயத்திலுள்ள கரவெட்டி கல்விக்கோட்டத்தில் 108 மாணவர்களும், பருத்தித்துறைக் கல்விக்கோட்டத்தில் 77 மாணவர்களும், மருதங்கேணி கல்விக்கோட்டத்தில் 28 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

வலய மட்டத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 85 வீதமான மாணவர்கள் 70மேல் புள்ளிகளையும், 12 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு அதிகமாக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்தில் கடந்த வருடம் 292 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.

தென்மராட்சி கல்வி வலயத்தில் இம்முறை 51 பாடசாலைகளைச் சேர்ந்த 91 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இரு வலயங்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சித்திவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது

grade-v-results

Related posts: