கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி!
Friday, April 8th, 2016
அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது – சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் அதே இடத்தைச் சேர்ந்த சசிகரன் சுதர்சன் எனவும், இவர் முன்பள்ளியில் கல்விகற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” ...
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் ...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|
|


