காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பானது – கெமுனு குற்றச்சாட்டு!

தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற கடந்த 2 ஆம் திகதி நீர்கொழும்பு – கல்கந்த புகையிரத பாதையை மறைத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணை பக்கசார்பாகவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி, இது தொடர்பாக இன்று(28) தேசிய காவற்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேச அமைச்சர்கள் சிலரின் ஆதரவாளர்களும் தொடர்புபட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
எச்சரிக்கை! புதியவகை வைரஸ் பரவும் அபாயம்!
ஆவா குழுவின் உறுப்பினர் கைது!
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டது!
|
|