காலி முகத்திடலில் உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம்!

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரத்தை நாட்டும் பணியில் இலங்கை தீவிரமாக இறங்கியுள்ளது. காலி முக த்திடலில் நிறுவவுள்ள இந்த மரம் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியும் நடக்கின்றது. டிசம்பர் முதலாம் திகதியன்று வேலை பூர்த்தியாகி மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்க ப்படவுள்ளது.
இத்திட்டத்தை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையும், அர்ஜூனா ரணதுங்க சமூக சேவை நல ன்புரி அமைப்பும் இணைந்து செய்கின்றன.. 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த நத்தார் மரம், தனியாரின் அனுசரணையுடனும், அமைச்சின் நிதிஉதவியுடனும் கட்டி எழுப்பப்படுகின்றது. 8.00,000 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மொத்த உயரம் 375 அடியாகும்.
இன்றுவரையில் செயற்கையாக எழுப்பப்பட்ட மிகப் பெரிய நத்தார் மரம் என்ற சாதனையை சீன நிறுவனம் செய்துள்ளது. 180.4 அடி உயரமுள்ள இந்த செயற்கை நத்தார் மரத்தை 2015ஆம் ஆண்டு டிசம்பர் 25அன்று எழுப்பியிருந்தார்கள்.
நத்தார் பண்டிகை கால முடிவில், இந்தச் செயற்கை நத்தார் மரம் தெடர்ந்து இருக்குமா என்பதைப் பற்றிய தெளிவான செய்திகள் இல்லை.
Related posts:
|
|