காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி நடவடிக்கை – நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்!

Saturday, February 25th, 2017

நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலை குறித்து சரியான தகவல்களை வழங்கியதினால் காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி நடவடிக்கையை  விவசாயிகளினால் மேற்கொள்ள  முடிந்துள்ளது என்று நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சீரற்ற காலநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட வயற்காணிகளில் 75%    அறுவடையை பாதுகாக்க முடிந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால கருத்து வெளியிடுகையில், தற்போது மொத்த  மின்னுற்பத்தியில் 92 சதவீதமானவை அனல்மின் உற்பத்திமூலம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். இதனால் அரசாங்கத்திற்கு 5100 கோடி ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யு. ரத்னாயக்க கருத்து வெளியிடுகையில், உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்; வறட்சிக்கால நிலையினால்  உற்பத்தியில ஈடுபடாதவர்களுக்கும் நட்டஈடுகளை வழங்க அரசாங்கம் தீரமானித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் தலைவர் சுல்பிகார் காதர் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

5

Related posts:


முஸ்லீம் ஆசிரியை ஒருவருக்கு  ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பி...
குளங்கள் அனைத்தும் அபாய மட்டத்தை அடைந்துவிட்டன - முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்ச...
அதிகளவான வீதித்தடைகள் – பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு இறுக்கமான கண்காணிப்பில் யாழ் நகர்!