காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!

காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மருதநகர் வில்சன் வீதியைச் சேர்ந்த மா.விஸ்வநாதன் (வயது-55) என்பவரே உயிரிழந்தவராவார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், 13ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவரின் நோய்நிலை அதிகரித்திருந்தது. இதனால் அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நோய்நிலை அதிகரித்த போதும் நோயாளியை வைத்தியர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றவில்லை என நோயாளியின் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங...
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது - அமைச்சர் நஸீர் ...
உலக தரவரிசையில் இலங்கைக்கு 76 ஆவது இடம் - தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
|
|