காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நாளையுடன் பூர்த்தி!

Thursday, July 14th, 2016

யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தெடார்பிலான சாட்சியங்களை பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நாளையுடன் நிறைவு பெறுகின்றது.

காணாமல் போனோர் தொடர்பில் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தற்போது அது தொடர்பிலான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

காணாமல் பேனோர் தொடர்பில் சாட்சிகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வருவதுடன் அதனை கருத்தில் கொண்டு ஆணைக்குழுவின் ஆயுட் காலத்தை மேலும் நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை கிடைக்ப்பெற்றுள்ள 19,000 முறைப்பாடுகளில் 4,000 முறைப்பாடுகள் தொடர்பில் முறையான சாட்சிகள் இல்லாமையினால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.

Related posts: