சுன்னாகம் நிலத்தடி நீர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Friday, August 5th, 2016

சுன்னாகம் நீர் மாசு தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் மாவட்ட  நீதவான்-ஏ. யூட்சன் முன்னிலையில் நேற்று (04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது   குறித்த வழக்கு விசாரணையை  எதிர்வரும்-12 ஆம் திகதி வரை ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டார்.

கழிவெண்ணை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த மே மாதம்-03 ஆம் திகதி மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் வலிகாமம் பகுதியிலுள்ள கிணற்று நீரைக் குடிக்கலாமா ? இல்லையா ? என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆகவே, இது தொடர்பில் தெரிவிக்கவும் , நொதேர்ன் பவர் நிறுவனத்தை மூடிய பின்னர் கழிவெண்ணையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக் குறைந்திருக்கிறதா ? என்பது தொடர்பில் தெரிவிக்கவும் ஆகஸ்ட் மாதம் -04 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் வடமாகாணப் பிரதம செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி கழிவோயில் பாதிப்புத் தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென நீதவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் வடமாகாணப் பிரதம செயலாளர்  நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இந்த வழக்கு விசாரணையின் போது யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் நீர்வழங்கல் அதிகார சபை அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தகக்கத்து

Related posts:

ஐ. நா. மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரில்  இலங்கையின் உயர்மட்ட குழு பங்கெடுக்க வாய்ப்பு?
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரானார் வடக்கின் மன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் – ஜனாதிபதியின் ப...
குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய...