காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க!

Sunday, September 17th, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொல்பித்திகம தேசிய பாடசாலையில் புதிய கட்டிடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.   இந்த நிகழ்வில், காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது, எந்த வகையிலும் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடியதல்ல. வடக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இல்லை என்று ஜனாதிபதியும் தானும் தெரிவித்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சரி, பிழை எவ்வாறு இருந்த போதிலும், அவற்றை இலங்கையில் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.எதிர்காலத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

Related posts: