காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!
Saturday, December 3rd, 2016
நாடா புயல் காரணமாகக் காணமற்போனதாக அறிவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர் என இடர் முகாமைத்துவ அமைச்சின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு – கிழக்குக் கடற்கரையோரமாகக் கடந்த இரு தினங்களாக நடாடபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு புயல் கரையைக் கடந்தது. பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்கள் காணாமற்போனதாக நேற்று முன்தினம் அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்கள் நேற்றையதினம் கரை திரும்பியுள்ளனர்.

Related posts:
யாழ் . மாநகர முதல்வர் வவுனியாவில்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...
|
|
|


