கல்வி அமைச்சருக்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!
Monday, July 19th, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளையதினம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவெளை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் அதிகரிப்பு!
அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத...
நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் - 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு...
|
|
|


