கல்வியியற் கல்லூரியில் சி.சி.ரி.வி கமராக்கள்!

Saturday, January 14th, 2017

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள ஏனைய கல்வியியற் கல்லூரிகளிலும் இக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

இக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் கல்லூரியில் பகிடி வதையில் ஈடுபடுபவர்கள், நேரத்தை வீணடிப்பவர்கள், வீண் வம்புகளில் தொடர்புபட்டவர்கள், ஆகியோரை இலகுவாக இனம்கண்டு கையும் செய்யுமாக அதிபரிடம் பிடிபடும் வாய்ப்புண்டு.

இக் கண்காணிப்புக் கமராக்கள் கல்லூரியில் மிக முக்கியமான சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதினால் மாணவர்கள், விரிவரையாளர்கள் ஆகியோர் மத்தியில் விசனம் வெளியிடப்பட்டாலும் உயர் மட்டத்தில் இதற்கு மிகுந்த திருப்தி தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகள், வீடுகள், அலவுலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் தற்போது கல்வியியற் கல்லூரிகளிலும் பொருத்தப்படுகிறது.

CCTV-450x300

Related posts: