கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!

Saturday, August 29th, 2020

பல்கலைக்கழகங்களில் கலைப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்காக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒவ்வொரு கலைப் பீடத்திலும் தகவல் தொழில்நுட்ப பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும், கலைப் பீடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கக்கூடிய வகையில் கணினி ஆய்வு கூடங்கள் அமைக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் வௌியேறிய பின்னர் அவர்களின் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான அறிவு குறித்து சான்றிதழ்கள் வழங்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடநெறி கற்கைகளை அடுத்த மாதம் முதல் ஒன்லைன் மூலம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அழிவடையும் நிலையில் நெற்செய்கை - முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர்!
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் - பிரதமர் தினேஷ் ...