கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும்!

தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாக கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வேட்புமனுத் தாக்கலின் போது 25 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட வரைபில் திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்பட்டது.
60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும் 40 சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலுமாக அமைந்த கலப்பு முறையில் பாராளுமன்ற மற்றும் உள்ளு+ராட்சி சபைத் தேர்தல்கள் நடத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது.
இதே அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த ஏற்பாடு செய்யும் வகையில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட வரைபில் சரத்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். பிரதமர் ரணிலை சந்தித்து கடும் அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர்.
Related posts:
|
|