கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத் தூது அழகியல் கல்லூரியில் நடாத்தப்படவுள்ள புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலீன், புல்லாங்குழல்,ஓகன், கிற்றார், ட்ரம், ஒக்ரோபாட், நடனம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் ஆகிய பிரதான பாடங்களுடன் கூத்து, கண்டிய நடனம், பண்பாடு(சைவசித்தாந்தம், கிறிஸ்தவம்), யோகாசனம், அழகுக்கலை, ஆங்கிலம் ஆகிய சிறப்புப் பாடங்களும் நடைபெறவுள்ளன.
மேற்படி கற்கை நெறிகளைக் கற்க விரும்புவோர் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து உடன் விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
உடை மாற்றும் அறை இன்மையால் தாதிய அலுவலர்கள் சிரமம்!
கொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
கடவுச்சீட்டு மோசடி – தொடர்ந்தும் பலர் கைது!
|
|