கருவாடு பதனிடும் வாடி தொடர்பாக சட்ட நடவடிக்கைகு  தீர்மானம்!

Wednesday, March 23rd, 2016

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி பகுதியில் அமைக்கப்பட்ட கருவாடு பதனிடும் வாடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுனாமிக்கு பின்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தலினை பின்பற்றாது குறித்த வாடி அமைக்கப்பட்டமை தொடர்பில் யாழ். கடற்றொழில் நீரியல் வள திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு பாரப்படுதியிருந்தது.

உரிய அறிவுறுத்தல் வரும் வரை குத்தகைக்கு வழங்கப்பட்ட கருவாடு பதனிடும் வாடியினை தொடர்ந்தும் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் வழங்க கரையோர பாதுகாப்பு திணைக்களம் பணித்துள்ளது.

மாவட்ட செயலகத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் முடிவின் போதே இவ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள கரையோர திணைக்கள அலுவலகத்தில் இருந்து குறித்தவாடி அமைக்கப்பட்டவிதம் தொடர்பில் சட்டரீதியான தீர்மானம் கிடைக்கும் வரை கருவாடு பதனிடும் தொழில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஒப்பந்தக்காரரிடம் நிபந்தனை அடிப்படையில் கருவாடு பதனிடும் வாடி திங்கட்கிழமை (21) கையளிக்கப்பட்டது.

Related posts:

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்கள...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்...
நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் - அமைச்சர் மனுஷ நாணயக...