கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 3ஆயிரம் இருதய நோயாளர்கள்!

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய நோயளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தச் சத்திர சிகிச்சைப் பிரிவில் ஒருவித நோய்க்கிருமி பரவி வருவதன் காரணமாகக் கடந்த 9ஆம் திகதி முதல் சத்திரச்சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் குறித்த சத்திரச்சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டிருந்தமையால் இருதய சத்திர சிகிச்சை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும், சத்திரச்சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களின் பட்டியல் 2020ஆம் ஆண்டுவரை நீண்டுள்ளது எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இருதய சத்திரச்சிகிச்சை நோயாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சில சமயங்களில் தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை எனவும் இந்த விடயம் தொடர்பாகச் சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|