கரம்பொன் “ஹீரோ ஸ்டார்” தீவகத்தில் சாதனை!

தீவக இளைஞர் கழகங்களுக்கிடையில் வருடா வருடம் நடைபெற்றுவரும் மென்பந்து துடுப்பாட்டப்போட்டியில் கரம்பொன் “ஹீரோ ஸ்டார்” கழகம் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
தீவகத்திலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட வரும் குறித்த சுற்றுப்போட்டி நேற்றைய தினம்(09) ஊர்காவற்றுறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதி போட்டி வளாகம் இளைஞர் அணியுடன் கரம்பொன் ஹீரோ ஸ்டார் அணி மோதிக்கொண்டது. இப்போட்டியில் வெற்றிகொண்டதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் (2014,2015,2016) கரம்பொன் “ஹீரோ ஸ்டார்” கழகம் வெற்றிகொண்டு தீவக கிரிக்கெற் கழகங்களுக்கபிடையே சாதனை படைத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு: 24 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த எதிர்பார்ப்பு - மின்...
பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
|
|