கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஜீன் 6ஆம் திகதி நியமனம்!

Thursday, June 1st, 2017

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த 25,26ஆம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தப் பாடங்களுக்கு வடக்கு மாகாணத்தில் 450 வெற்றிடங்கள் உள்ளன. 352 பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அழைத்திருந்தோம். அவர்களில் 321 பட்டதாரிகள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு தோற்றியிருந்தனர். தொற்றியிருந்த பட்டதாரிகளில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவருமே தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஓர் பல்கலைக்கழகம் சார்ந்த பட்டதாரிகள் அங்கிருந்து சான்றிதழ்களைப் பெற்றுச் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது அந்த சான்றிதழை இன்றும் நாளையும் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டதும் குறித்த நேர்முகத் தேர்வில் தோற்றி தகுதியானவர்கள் எனக் கண்றியப்பட்ட அனைவருக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது. அதற்கதன தனியான அழைப்புக் கடிதங்கள் குறித்த பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Related posts:

தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்...
உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
வடக்கில் பக்கவாத நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு - நரம்பியல் வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல்!