கணக்கியல், ஆங்கில டிப்ளோமா கற்கைகளுக்கு விண்ணப்பம் கோரல்!
Saturday, February 18th, 2017
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான கணக்கியல் மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தொழில்நுட்பக் கல்லூரியின் மேலதிக பணிப்பாளர் சாந்தகுமார் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கணக்கியல் டிப்ளோமா கற்றை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த.உயர் தரத்தில் வர்த்தக கற்கை நெறியில் 3பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்பக் கல்லூரியில் கணக்கியல் கற்கை நெறியைப் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொழில்நுட்பக் கல்லூரியில் 6மாதம் அல்லது 1வருட ஆங்கில கற்கை நெறியைப் பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். 021 221 2403 என்ற தொலைபேசியூடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளது,

Related posts:
|
|
|


