அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024

அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி சமகால அரசியல் நிலைமைகள் குறித்து  மேலும் கூறுகையில் –

மரணித்த உடலை மயானத்திற்கு கொண்டுச் செல்ல வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியாமலும், பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டபோது பரசிட்டமோல் தேடிக்கொள்ள முடியாமலும் இருந்த நாடு, இன்று நிம்மதியாக மூச்சு விடுகிறது.

அதேபோன்று முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் அறிவியல் முறையில் படிப்படியாகவே முன்னெடுக்கப்படுகிறன. அதேநேரம் அதிகாரத்திற்காக நான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை. நாட்டை மீளக் கட்டியெழுப்பவே முயற்சிக்கிறேன்

இதேவேளை பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு நரகத்தில் மீண்டும் விழ வேண்டுமா? அல்லது தற்போதை பாதையில் சுவர்க்கத்தை சென்றடைவதா?. இதேநேரம் தற்போதைய பாதையைத் தவிர வேறு வழிமுறைகள் எவையும் இல்லை. நாம் இதுவரையில் அடைந்திருக்கும் வெற்றிகள் அதனை உறுதி செய்துள்ளன.

அதனால் இதே வழியில் முன்னேறிச் செல்வதற்கான சட்ட திட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கிறோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: