கணக்காய்வாளர் நாயகம் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
Sunday, July 17th, 2016
சுதந்திரமாக செயற்பட விடாது போனால் தாம், பதவி விலகப் போவதாக கண்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலேயே தமது அறிக்கையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் அதனை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கோப் குழுவுக்கு தாம் அரசநிறுவனங்கள் தொடர்பில் வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் நிதியாள்கை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தநிலையில் தம்மை விமர்சிப்பவர்களுக்காக அல்ல. மக்களின் நலனுக்காகவே தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்
Related posts:
யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!
நீதிக்கான அணுகலில் எந்தவிதமான பாகுபாடும் கிடையாது – நீதி அமைச்சர் அலி சப்ரி!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது - அமைச்சர் நிம...
|
|
|


