கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறையில் நடவடிக்கை!

ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் கட்டாக்காலியாக அலையும் ஆடு, மாடுகளைக் கடந்த திங்கட்கிழமை முதல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் உரிமை கோரப்படாத கால்நடைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இப் பிரதேசத்தில் கால்நடைகளை வளர்ப்போர் தமது கால்நடைகளுக்கு கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு காது அடையாளமிடப்படுதல் வேண்டியதுடன் தமது கால்நடைகளைக் கட்டி வளர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பிரதேச சபை செயலாளரின் நடவடிக்கைக்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!
காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் பாரபட்சம் வேண்டாம் - ஜனாதிபதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - அறிக்கைகளை வழங்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் ஜனாதிபதியி...
|
|