கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறுதலாக விழுந்ததில் தலையில் படுகாயம்!

கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறுதலாக விழுந்ததில் தலையில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(31-05-2016) நண்பகல் 12.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த தொழிலாளி இரண்டாம் மாடியில் புதிதாகக் கட்டடம் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது பொருளொன்றினைஎடுப்பதற்காகக் கட்டடத்தின் விளிம்பிற்கு வந்துள்ளார். இதன் போது மாபிள் சறுக்கிக் கீழே விழுந்ததில் தலையில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த தேவராசா சுதாசீலன்(வயது- 28) என்ற இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு !
நிர்மாணத்துறையின் சவால்களை வெற்றிகொள்ள உடனடி நடவடிக்கை - ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
ராஜீவ் காந்தி கொலை விவகாரம் – விடுதலையான சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை காலமானார்!
|
|