கடும் வறட்சி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நிவாரண உதவி!
Wednesday, February 22nd, 2017
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளது.
இந்த நிவாரண திட்டத்திற்காக 100 மெற்றிக் தொன் அரிசியும், எட்டு குடிநீர் பௌஸர்களும் வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி சுப்ரமணியன் ஜயசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பணிப்புரைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகிறது. இலங்கைக்கு போதுமான உதவியை தொடர்ந்தும் வழங்கத் தயார் என்று அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts:
யாழ் குடாவில் பெருந்தொகை இறால் பிடிபாடு!
ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை!
தேர்தல்களுக்கு தயாராகுமாறு ஐ.தே.வுக்கு பிரதமர் ரணில் அழைப்பு!
|
|
|


