கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!

இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தால் நடத்தப்படவுள்ள கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கற்கை நெறி தேசிய தொழில் தகைமை மட்டம் 5க்குரியது. 18 மாதங்களைக் கொண்ட இக்கற்கை நெறி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இக்கற்கை நெறியை கற்க விரும்புவோர் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறும் மேலதிக விபரங்களை முதலாம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய அலுவலகத்துடன் நேரடியாகவோ அல்லது 071 8349073 மற்றும் 0762939888 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு பெற முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நுகர்வோர் அதிகார சபை விசேட நடவடிக்கை!
அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு இடைநிறுத்தம்!
5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது - வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
|
|