கடற்படை வீரர்களுக்கு வீரப்பதக்கம்!
Friday, November 11th, 2016
இலங்கை கடற்படை யுத்த வீரர்களின் வீரம் மற்றும் துணிகர செயல்களை பாராட்டி வீர பதக்கம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு கடற்படை தலைமையகத்தில் நேற்று முன்தினம்(9) நடைபெற்றது. இந்த நிகழ்வில் 72 கடற்படை யுத்த வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வீர பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
குறித்த நிகழ்வில் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ரண விக்கிரம பதக்கம் வழங்கப்பட்டதுடன் கடற்படையின் 71 அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்களுக்கும் ரண சுற பதக்கமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிறிமவன் ரணசிங்க, கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், குறித்த பதக்கங்களை பெற்றுக்கொள்ளும் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts:
இணங்கியது சுகாதார அமைச்சு !
புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பவ்ரல் அமைப்பு கருத்தறிவு!
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் - சுற்றுச்சூழல...
|
|
|
நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை!
பால்நிலை சமத்துவத்தில், கடந்த 25 வருடகாலம் அடைந்த முன்னேற்றங்களை கொவிட்-19 நெருக்கடி அபகரித்து விடக்...
தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! - இலங்கை இறைமையுள்ள நாடு என பிரதமர் தெரிவிப்ப...


