கடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

Wednesday, June 21st, 2017

கடன் அட்டைக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு வணிக வங்கிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் கடன் அட்டைக்காக செலுத்தப்பட வேண்டிய நிலுவை கட்டணத்திற்கான வருடாந்த வட்டி நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி அதிகரிப்பு எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 28 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த திருத்தப்பட்ட வட்டி வீதம், 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதியின் பின்னர் அனைத்து கொடுக்கல் வாங்கல்களின் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறித்த வங்கிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை 2017ஆம் ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கையில் இயங்கும் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,354,971 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவற்றில் 28,621 கடன் அட்டைகள் உள்ளூர் ரீதியில் மாத்திரம் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றவை எனவும், ஏனைய 1,326,350 கடன் அட்டைகள் சர்வதேச கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றவைகள் என தெரிவிக்கப்படுகின்றது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மாதாந்த கட்டண விபர அறிக்கையுடன் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதம் தொடர்பான தகவலும் பரிமாற்றம் செய்யப்படவுள்ளது.

Related posts:

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்த்துவிடலாம் என எவரும் கனவுகாண வேண்டாம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச...
தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட ...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும...