கடனை செலுத்த நிவாரண காலத்தை பெறுவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு இதுவரை வழங்கியுள்ள கடனை செலுத்துவதற்கு மூன்று வருட நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன குடியரசின் அரசியல் ஆலோசனை சபையின் தேசிய குழுவின் தலைவர் யு சேன் ஷேன் உட்பட பிரதிநிதிகளுடன் இலங்கை அரசின் பிரதிநிதிகள் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் சீனாவிடம் இருந்து பல பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளன.
இந்த பெருந்தொகை கடனை செலுத்த மூன்று ஆண்டு கால நிவாரணத்தை பெற்றுக்கொள்வதே பேச்சுவார்த்தையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எரிபொருள் பிரச்சினையால் மின் நிலையங்கள் செயலிழப்பு!
அரச நிறுவன பிரதானி பதவிகளுக்கு 60000 பேர் விண்ணப்பம்!
திருக்கார்த்திகை திருநாள் !
|
|