கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்!
Tuesday, June 8th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அவர்களில் 2 ஆயிரத்து 610 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 36 பேருக்கும் நேற்று (07) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 45 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தொற்றுறுதியான 30 ஆயிரத்து 145 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
தொண்டராசியர்களின் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது!
தென்பகுதிக்கு ஏற்றுமதி : கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம்!
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...
|
|
|


