கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு – சுகாதார அமைச்சு!
Monday, January 16th, 2017
நாட்டில் கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 342 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 126 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 84 பேரும் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 38 பேர் டெங்கு காய்ச்சலுக்குட்பட்டுள்ளதாக ஆய்வுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது. அத்துடன், கடந்த 15 நாட்களில் கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 157 பேர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மாணவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்!
முறையற்ற விதத்தில்யன்படுத்தி பணம் பணம் வசூலித்த கும்பல் தொடர்பில் தகவல்!
நோய்களைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தவேண்டும் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


