கடந்த நவம்பரில் மாத்திரம் 567 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்குச் சிகிச்சை!
Thursday, December 8th, 2016
கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 567 பேர் வரை நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 567 வரையானோர் நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 104 பேருக்கு விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாய்க் கடிக்கு இலக்கான ஏனையவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நாய்க் கடிக்கு உள்ளாகுபவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts:
விபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவ...
வெளிநாட்டவர்களால் இலங்கைக்கு அதிக வருமானம்!
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
|
|
|


