கச்சான் வியாபாரிகள் மீது மருதடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் ரவுடித்தனம்!

Saturday, April 16th, 2016

தமது நாளாந்த வயிற்றுப்பிழைப்புக்காக கச்சான் வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை நடத்திவரும் கச்சான் வியாபாரிகள் மீது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய அரசியல் பின்புலம் கொண்ட நிர்வாக சபையினர் மேற்கொண்ட ரவுடித்தனத்தால் தமது இயல்பான வியாபார நடவடிக்கைகளுடன் முதலீடுகளையும் இழந்துள்ளதாக மானிப்பாய மருதடி விநாயகர் ஆலயச் சூழலில் கச்சான் வியாபாரத்திலீடுபட்டு குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவர் தெரிவித்ததாவது –

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு  ஆலயச் சூழலில் சிறு மணிக்கடை மற்றும் கச்சான் வியாபாரங்களை மேற்கொண்டு வந்த வறிய வியாபாரிகளான எம்மீது மானிப்பாய் மருதடி ஆலய நிர்வாக சபையின் அங்கத்தவரான அரசியல் பின்புலம் கொண்ட கௌரிகாந்தன் என்பவரும் அவரது சில உறுப்பினர்களும் இணைந்து அடாவடித்தனத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்றையதினம்(15) மருதடி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு வழமைபோல தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட கச்சான் மற்றும் மணிக்கடை வியாபாரிகளை  வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தெரிவித்து அவர்களது கச்சான் உட்பட்ட வியாபார பொருட்களை அகற்றுவதிலீடுபட்டனர்.

தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்த கச்சான் வியாபாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் குறித்த குழுவினர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் வரி மேற்பார்வையாளருக்கு தெரியப்படுத்தி குப்பை அகற்றும் உழவு இயந்திரங்களை வரவழைத்து எமது வியாபாரப்பொருட்களை அதில் ஏற்றி அடாவடித்தனம் நடத்தினர். இதனால் 27 போர் பாதிக்கப்பட்டுள்ளோம்.

குறித்த கும்பலது அடாவடித்தனத்தால் நாளாந்த வயிற்றுப்பிழைப்பிற்காக வியாபாரத்தை மேற்கொண்டுவரும் கச்சான்கடை வியாபாரிகளான நாம் எமது முதலீடுகளை இழந்து தவிக்கின்றோம். மேலும் ஆலய நிர்வாகிகளது இந்த அடாவடித்தனத்தால்  பாதிக்கப்பட்ட எமக்கு ஒரு நியாயம் வழங்கப்படுவதுடன் நஸ்ட ஈடும் கிடைக்கவேண்டும் எனவும் அதுவரை தாம் போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

வருடாந்த உற்சவ காலத்தில் குறித்த பகுதியில் அலய நிர்வாகத்தினரால் 10 சதுர அடி கொண்ட ஒரு பகுதிக்கு 35000 ரூபா பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் குறித்த கச்சான் வியாபாரிகள் தமது வறுமை நிலை கருதி வீதிகளின் ஓரத்தில் இருந்து குறித்த காலப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்றும் இதன்காரணமாகவே கௌரிகாந்தன் என்பவர் இத்தகைய அடாவடிச்செயலை மேற்கொண்டார் எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்Jள்ளனர்.

image-ad95d50dc1d89f180d314b5117277066ff387526b41988e8ca03d35990e51923-V image-0f79b021b887e672c8b6be523e919674d61a6a4f1b1d721696243a9aa067d16b-V image-a839fafe24920c795e1c6113949eb210e3b591a54c4e581479f93a9b010b308d-V

Related posts: