ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நாளை!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் விதவைகள், அநாதைகள், ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்களின் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மகளிர் விவகார அமைச்சினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஓய்வூதியத் திணைக்களத்தினரும் வருகை தரவுள்ளதால் பாதிப்பிற்குள்ளாகிய நிலையிலுள்ள விதவைகள், அநாதைகள், ஒய்வூதியர் அனைவரையும் தவறாது பங்குபற்றி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
பொரளையில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கடத்தல்; விசாரணை ஆரம்பம்!
பதவிகளை துறக்குமா கூட்டமைப்பு: கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன்!
யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெரு...
|
|