ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!
 Saturday, August 6th, 2016
        
                    Saturday, August 6th, 2016
            
ஓடும் பேருந்தில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன.
எதேச்சியாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பேருந்தில் சுன்னாகம் பேருந்தில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பொலிஸார் வரவழைக்கப்பட்டு பேருந்தில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது மர்ம உறுப்பில் மறைத்து வைத்துள்ளமை தெரியவந்தது.
பின்னர் குறித்த பெண்ணுடன் வந்த தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        