ஒரு நாள் நிமிடம் வேகத்தை தணிப்போம் யாழில் விழிப்புணர்வு நிகழ்வு

Thursday, November 17th, 2016

“ஒரு நாள் ஒரு நிமிடம் வேகத்தை தணிப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்பாடு ஒன்று இன்றையதினம் யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள பல்வேறு பகுதிகளில் 7.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சக்தி சலாசார மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்பாடானது இன்றையதினம் காலை 7.30 மணி தொடக்கம் யாழ்ப்பாணம், மாம்பழம் சந்தி, யாழ்.மாவட்ட செயலக முன்றல், நல்லூர் பின்வீதி, முத்திரைச் சந்தி மற்றும் நாவலர் வீதி சந்திகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலாசாரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வீதியால் பயணிக்கும் வாகனங்களை ஒரு நிமிடம் மறித்து சாரதிகளுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியை கூறி ஸ்ரிக்கர் ஒட்டப்படும். அத்துடன் பிரயாணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்படவுள்ளது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டுக்கு அனைத்து பொது மக்களும் ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

speed_limit

Related posts: