ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் குப்பைகளை கொட்டுங்கள்!

வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் கழிவுகளைக் கொட்டுமாறு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுதோஸ் குமார் அறிவித்துள்ளார். கரணவாய் மண்டான் உப்பு வீதியில் கழிவுகள் கொட்டுவதற்காக சுவர் அமைக்கப்பட்டு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு வெளியில் கழிவுகள் கொட்டப்படுவதனால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதுடன் தொற்று நோய்களும் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகளைக் கொட்டுவோர் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் கழிவுகளைக் கொட்டுமாறும் வீடுகளில் சேரும் கழிவுகளை பைகளில் இட்டு கழிவகற்றும் வாகனம் வரும் பாதையில் வைப்பதன் மூலம் அக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Related posts:
பொதுத்தேர்தல் தொடர்பில் ஆராய அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்த!
தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப...
வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!
|
|