ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது
இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டத்திற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டமும் அங்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார இதனை எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.எனினும் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் எதையேனும் அரசாங்கத்தினால் செய்ய முடியாது போயுள்ளது
இதற்கான காரணம் என்னவென்று யோசிக்கும் போது நீதித்துறையில் ஏற்பட்ட தாமதமே என தெரியவருகிறதுஅதன்படி நீதியமைச்சருக்கு தமது பொறுப்புக்களை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத பட்சத்தில், அவரை பதவியில் இருந்து விலக்கி தகுதிவாய்ந்த ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்குமாறு பிரதமரை வலியுறுத்தவுள்ளதாகவும் நலீன் பண்டார குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|