ஏரியில் வீசப்பட்ட குழந்தை : தாயானார் பெண் பொலிஸ் அதிகாரி!
Saturday, February 18th, 2017
மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.
எனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Related posts:
தலைமை பதவியிலிருந்து ஓமல்பே சோபித தேரர் விலகல்!
குழந்தை பிறந்து 6 நாட்களில் இளம்தாய் ஒருவர் மரணம்
14 முதல் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு க...
|
|
|


