ஏமாறத் தயாரில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர்!
Thursday, August 31st, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களையும் எழுப்பினர்.
Related posts:
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!
வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு!
“ப்ளூ வேல்” வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
|
|
|


