மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!

Monday, February 13th, 2017

மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல் என்பனவற்றுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை பெப்ரவரி 1ஆம் நாள் அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அளித்துள்ளது.இந்த அனுமதிகளை வழங்கும் கடமை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளிடமே இருந்து வந்ததமை குறிப்பிடத்தக்கது.

sri-lanka-emblem-1-280x185

Related posts: