எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி!

Thursday, December 8th, 2016

எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் எல்லை நிர்ணய மதிப்பீட்டு குழு கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த அறிக்கைக்கு அமைவாக எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்துவது போன்றே வரைபடங்களை பட்டியலிடும் நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தின் படி 4888 தேர்தல் தொகுதிகள் காணப்படுவதுடன், அதற்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 3022 ஆகும்.எவ்வாறாயினும் இந்த 4888 தேர்தல் தொகுதிகளில் சுமார் 63% வை எல்லை நிர்ணய மீள் மதிப்பீட்டின் போது திருத்தம் செய்யப்படும் என்று அசோக பீரிஸ் கூறினார்.

 election-department_4

Related posts: