அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

Tuesday, June 23rd, 2020

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் - ஜனாதிபதியின் மேலதிக செயலாள...
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது - சீனா உறுதியளிப்...