எரிபொருளுக்கான QR மீள் நிரப்பு முறைமையில் மாற்றம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Wednesday, March 8th, 2023
எதிர்வரும் காலங்களில் எரிபொருளுக்கான QR குறியீடு வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் மீள் நிரப்பப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (8) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கீடு மீள் நிரப்பப்படவுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமைகளில் QR குறியீடு மீள் நிரப்பப்பட்டுவந்தது. இதனால் வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எரிபொருள் ஒதுக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முல்லைத்தீவுமாவட்டத்தில் பெண் தலைமைத்துவகுடும்பங்கள் 6765!
க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்!
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும...
|
|
|


