எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயார்!

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச மயப்படுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மத்தள விமான நிலையத்தை நாம் ஒருபோதும் தனியார் மயமாக்க மாட்டோம். மே தினத்தை வெவ்வேறாக இரு பிரதான கட்சிகள் ஏற்பாடு செய்வதினால் தேசிய அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை. அது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்ட பின் பேருந்து சேவை சீராகும் !
மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தயார் – ஜனாதிபதி...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல் பீரிஸ் நீக்கம்!
|
|