என் மீதான துப்பாக்கி சூடு குறித்து பொய்யான தகவல்கள் – சைட்டம் நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு!

Saturday, March 4th, 2017

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தன்னை இழிவுபடுத்தவும் பயமுறுத்தவும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வதந்திகளாகவும் எனக்கெதிராகவும் உள்ளன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டு வரும் நபர் எந்த வகையிலும் என்னுகுத் தொடர்புடையவர் கிடையாது நான் குற்றமற்றவர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் உண்மையான குற்றவாளிக்ள விரைவில் கைது ஆவார்கள் என்று நம்புகின்றேன். குற்றவாளிகள் கைது செய்யப்படும் பட்சத்தில் அனைவரும் உண்மைய அறியலாம்

கடந்த நில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது நானும் மேலதிக தகவல்களை பெறுவதற்கு குறித்த இடத்திற்குச் சென்றேன் இதன்போது பொலிஸார் என்னிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர் நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன்.

என்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவில்லை. குறித்த விடயம் தொடர்பில் சைட்டம் நிறுவனத்திற்கும் பாதக தன்மை ஏற்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் விசாரணைகள் நிறைவடையும் வரை விடுமுறையளிக்குமாறு நான் சைட்டம் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுக்கத் தீர்மானித்தேன் தலைமை நிறைவேற்று அதிகாரி என்ற பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளேன். அதனைச் சில ஊடகங்கள் வேறு விதமாக விஸ்த்தரித்து செய்திகளை வெளியிடுகின்றன. அதுமட்டுமின்றி எனக்கு எதிராகச் செற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் என் கல்வித் தகுதிகள் தொடர்பிலான பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

1170

Related posts: