எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Saturday, July 31st, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பெருமளவான அரச ஊழியர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அரச சேவையினை வழமை போன்று முன்னெடுத்து செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலாளர் கூறிய ஆலோசனையின் பிரகாரம் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமுகமளிக்க வேண்டும்.
இதற்கமைய, சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து சுற்றுநிரூபங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் - கல்வி அமைச்சு அற...
இன்று தொடக்கம் பாடசாலைகளுக்கு விடுமுறை - புதிய கல்வியாண்டுக்கான திகதியும் அறிவிப்பு!
தொல்பொருள் ஆலோசனை குழுவில் புதிய உறுப்பினர்கள் - அமைச்சர் விதுரவினால் வர்த்தமானி வெளியீடு!
|
|
|


