எட்கா உடன்படிக்கையில் சில மாற்றங்கள் – அமைச்சர் மலிக் சமரவிக்ரம!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவு தொடர்பிலான உடன்படிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது என என அபிவிருத்தி தந்திரோபாய மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்.இலங்கைக்கு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் நன்மை ஏற்படக்கூடிய வகையில் இந்த உடன்படிக்கை உருவாக்கப்படும்.
இது தொடர்பான வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எட்கா உடன்படிக்கை இந்த ஆண்டு நிறைவிற்குள் கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|