ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் நீர்பாசன செயற்றிட்டங்கள் தொடரும்!
Monday, June 19th, 2017
அதிகாரிகள், பொறியியலாளர்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர் பற்றாக்குறை, நீர்பாசன செயற்றிட்டங்களில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் சில மாவட்டங்களில் நீர்பாசன செயற்திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இதுதவிர, ஒப்பந்தகாரர்கள் பொறுந்தாததன் காரணமாக மீண்டும் மீண்டும் ஒப்பந்த கோரிக்கைகளை விடுக்க வேண்டிய நிலை உள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் இவற்றுக்கான தீர்வு எட்டப்படும் என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!
கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சி - கனியவள கூட்டுத்தாபனம் தகவல்!
நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்க அழைப்பு!
|
|
|


